கே.எஸ்.சிவகுமாரன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
(4), 76 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-432-4.-
திறனாய்வு என்றால் என்ன என்பதனை இலகு தமிழில் இந்நூல் விளக்குகின்றது. குறிப்பாக 20ஆம் நூற்றாண்டில் மேனாட்டு இலக்கியங்கள் சார்ந்த கருத்தியல்கள் உள்வாங்கப்பட்டதன் காரணமாக எழுந்த திறனாய்வுக்கோட்பாடுகளை அறிந்துகொள்ள இந்நூல்பெரிதும் உதவுகின்றது. நீண்டகாலம் திறனாய்வுத் துறையில் ஈடுபாடு கொண்ட ஆசிரியரின் அனுபவம் சார்ந்த 13 கட்டுரைகளும் பின்னிணைப்பாக ஆய்வறிவாளர் கைலாசபதியும் நூலாசிரியரும் என்ற கட்டுரையும் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன. திறனாய்வு: சில பொதுப் பண்புகள், இலக்கியம்: சில விளக்கங்கள், திறனாய்வின் உட்கூறுகள், செயன்முறைத் திறனாய்வு, பல்நெறிசார்ந்த திறனாய்வு, கலைநயமும் திறனாய்வும், ஈழத்தில் திறனாய்வு, சில ஈழத்துத் திறனாய்வு நூல்கள், கவிதைத் திறனாய்வு, நாடகத் திறனாய்வு, சமூகவியல் போக்குத் திறனாய்வு, கைலாசபதியின் திறனாய்வு அணுகுமுறை, சவாமி விபுலாநந்தர் ஈழத்தின் திறனாய்வு முன்னோடி ஆகிய தலைப்புகளில் 13 கட்டுரைகளும் எழுதப்பட்டுள்ளன. கவிதைத் திறனாய்வு, நாடகத் திறனாய்வு, பல்நெறிசார்ந்த திறனாய்வு எனப் பல அம்சங்கள் கற்பதற்கேற்ற வகையில் இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. திருக்குறள் காலம் தொட்டு, நவீன காலம் வரையுள்ள திறனாய்வு பற்றிய விபரங்களை ஆசிரியருக்கே இயல்பான சுருக்கமான நடையில் பதிவிட்டுள்ளார். இலக்கிய மாணவர்களுக்கும் ஆய்வாளர்;களுக்கும் பயன்மிக்க நூல்.