தெணியான் (மூலம்), க.நவம் (தொகுப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஜனவரி 2015. (நெல்லியடி: பரணி அச்சகம்).
(8), 190 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-4676-22-0.
சாஹித்திய ரத்னா தெணியான் எழுதிய 34 கட்டுரைகளை அவரது சகோதரர் க.நவம் நூலாக்கித் தந்துள்ளார். இதுவே தெணியானின் முதலாவது கட்டுரைத் தொகுப்பாகும். இத்தொகுப்பில் அடங்கியுள்ள 24 கட்டுரைகளின் தொனிப்பொருளாக கலை, இலக்கியம், சமூகம், அடிநிலை மக்கள் நிலை, விமர்சனம், சாதியம் சார்ந்த விடயங்கள் அமைந்துள்ளன. ஏனைய 10 கட்டுரைகளும் தனி மனித ஆளுமைகள் பற்றி எழுதப்பட்டவை. இது 41ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது. ஈழத்தின் மூத்த எழுத்தாளரான தெணியான் யாழ்ப்பாணத்தில் வெளிவந்த ‘விவேகி’ சஞ்சிகையில் 1964 ஓகஸ்ட் இதழில் பிரசுரமான பிணைப்பு என்ற சிறுகதையுடன் எழுத்துலகில் அடியெடுத்து வைத்தவர். சிறுகதை, நாவலாசிரியராக இன்று பிரபல்யம் பெற்றிருக்கிறார். தெணியானின் 50 ஆண்டுக்கால எழுத்தூழியத்தின் ஒரு பகுதியின் அறுவடையாக இந்நூல் அமைகின்றது.