இ.க.சிவஞானசுந்தரம். கொழும்பு 6: இனிய தென்றல் பப்ளிக்கேஷன்ஸ், இல.135, கனல் பாங்க் வீதி, 1வது பதிப்பு, பங்குனி 2015. (கொழும்பு 13: தேவி பிரின்டர்ஸ், கொட்டாஞ்சேனை).
213 பக்கம், விலை: ரூபா 330., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-0254-23-1.
தரம் 10-11 பரீட்சைக்குரிய முன்னோடி வினா-விடை நூல். புத்தகசாலை (பாரதிதாசன் கவிதை), பத்தி எழுத்துக்கள், வாய்மொழிப் பாடல், இனிது என, தாய்ப்பசு, கிட்கிந்தைப் படலம், விவேக சிந்தாமணி, உரிமையும் கடமையும், எலியம், நலம் புனைந்து உரைத்தல், புதுமைப் பெண்ணாய் மாறிடுவோம் ஆகிய 11 அத்தியாயத் தலைப்புகளின்கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் இ.க.சிவஞானசுந்தரம் ஒய்வுபெற்ற ஆசிரியர் கல்விவள ஆலோசகராவார். (இந்நூல் கொழும்புப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 68541).