எஸ்.சிவநிர்த்தானந்தா (புனைபெயர்: எஸ்.எஸ்.ஆனந்தன்). கொழும்பு: எஸ்.சிவநிர்த்தானந்தா, 1வது பதிப்பு, ஜுலை 1998. (கொழும்பு 13: லக்சு கிராபிக் பிறைவேட் லிமிட்டெட், 98 விவேகானந்தா மேடு).
vi, 80 பக்கம், விலை: ரூபா 90., அளவு: 20×14.5 சமீ.
கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான உப பாடநூல். இதில் பாரதியார் பற்றிய ஓர் அறிமுகம், பாரதியார் பற்றிய நோக்கு-1, பாரதியார் பற்றிய நோக்கு-2, விநாயகர் நான்மணிமாலை, வெண்ணிலவே, எந்தையும் தாயும், புதுமைப் பெண், தொழில், மகாத்மா காந்தி பஞ்சகம், உயிர்பெற்ற தமிழர் பாட்டு, காணி நிலம், அக்கினிக் குஞ்சு, வசன கவிதை-காற்று ஆகிய 13 தலைப்புகளில் எழுதப்பட்ட பாடங்கள் கட்டுரைகள், கவிதைகள், விளக்கவுரைகள் குறிப்புகள் எனப் பல்வேறு வடிவங்களில் மாணவர்களுக்கான கல்வித்தேவையை நிறைவுசெய்யும் வகையில் வழங்கப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 125024).