பெ.கோ.சுந்தரராஜன் (சிட்டி), சோ.சிவபாதசுந்தரம். சென்னை 600 003: கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், தபால் பெட்டி எண் 501, Park Town, 1வது பதிப்பு, 1977. (சென்னை: Diocesan Press).
xxviii, 299 பக்கம், விலை: இந்திய ரூபா 15., அளவு: 21×14 சமீ.
மதுரைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் சிறப்புச் சொற்பொழிவுத் திட்ட வரிசையில் நிகழ்த்திய ஆறு உரைகளின் விரிவு. தமிழ்நாவல்களின் ஒரு நூற்றாண்டு நிறைவு விழாவை மதுரைப் பல்கலைக்கழகமும், இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகமும் இணைந்து செப்டெம்பர் 1976இல் நிகழ்த்தியிருந்தன. திரு சிவபாதசுந்தரம் கால வரிசையாக நாவல்கள் தோன்றிய சூழல்களைப் பற்றிய செய்திகளைத் தமது கட்டுரையில் விளக்கியிருந்தார். திரு சிட்டி நாவல்களின் கதைகளையும் திறனாய்வுக் குறிப்புகளையும் எடுத்தரைத்தார். இவ்விருவரின் உரைகளின் வழியாக பெறப்பட்ட செய்திகளையும் கருத்துக்களையும் இந்நூல் பண்பாட்டுக் கவலை, சமுதாய விமர்சனம், இலக்கிய உணர்வு ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் திரட்டித் தந்திருக்கிறார்கள்.