10855 ஒருங்கிணைந்த புவியியல் தகவல் முறைமை.

ஐ.எல்.எம்.சாஹிர், எம்.ஐ.எம்.கலீல். கண்டி: குறிஞ்சி வெளியீட்டாளர், 280 ஏ, டீ.எஸ்.சேனநாயக்க வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2014. (அச்சக விபரம் தரப்படவில்லை).

xviii, 135 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-51398-5-4.

இந்நூல் தகவல் முறைமையின் அடிப்படை அம்சங்களை எளிய தமிழில் துல்லியமாக அறிமுகம் செய்கின்றது. புவியியல் தகவல் முறை, அதன் தோற்றம், வரலாறு போன்ற அறிமுகக் குறிப்புகளுடன் ஆரம்பிக்கும் இந்நூல் புவியியல் தகவல் முறைமையின் உள்ளடக்கம் மற்றும் கூறுகள் குறித்து விரிவாக ஆராய்கிறது. தகவல் முறைமைப் பயன்பாட்டில் உள்ள வன்பொருட்கள், மென் பொருட்கள், தகவல் முறை, தரவு முறை, விமானப் புகைப்படம், செய்மதிப் படம், தரவுகளை வகைப்படுத்துவதன் அனுகூலங்கள் போன்றன குறித்தும் இந்நூல் தெளிவாக விளக்குகின்றது. புவியியல் புள்ளிவிபரத்  தரவும் முகாமைத்துவமும் குறித்து இந்நூல் பரிசீலிப்பதுடன் புவியியல் தகவல்-தரவு உள்ளீடு, புவியியல் தரவு உள்ளீட்டின்போது ஏற்படும் தவறுகள், தவறுகளைச் சீர்செய்தல், புவியியல் தகவல் முறைமையின் பிரயோகங்கள் பற்றியும் பரிசீலனை செய்கின்றது.  நவீன புவியியல் ஆய்வில் முக்கிய இடத்தினைப் பெறும் வான்வெளி, தொலைநகர்வு, தொலைநகர்வின் வகைகள் (செயற்கைக்கோள்கள்) குறித்தும் இந்நூல் தெளிவுபடுத்துகின்றது. பல்வேறுபட்ட புகைப்பட வகைகளையும் வாசகர்களுக்கு அறிமுகம் செய்கின்றது. தகவல் விம்பம், தொலையுணர்வின் பயன்பாடு, நில அளவீடுகள், நில அளவீட்டு வரைபடங்கள், மேலும் உலக அமைவிடங்களைக் கண்டறிவது பற்றியும் இந்நூல் கவனம்செலுத்துகின்றது.  நவீன புவியியல் தகவல் முகாமைத்துவப் பரப்பில் உள்ளீர்க்கப்பட்டுள்ள  Remote Sensing, GPS, GIS, போன்ற புதிய நுட்பங்கள் குறித்த தகவல்களையும் இந்நூலில் காணலாம். நூலின் இணையாசிரியர் ஐ.எல்.எம்.சாஹிர், அம்பாறை, காணி பயன்பாடு கொள்கை திட்டமிடல் திணைக்களத்தின் திட்டமிடல் உதவியாளராவார். கலாநிதி எம்.ஐ.எம்.கலீல் ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் புவியியல்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளராவார். (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 198328). 

ஏனைய பதிவுகள்

15610 யாழ்பாவாணன் கவிதைகள்.

மாதகல்வாசி காசி. ஜீவலிங்கம் (புனைபெயர்: யாழ்பாவாணன்). யாழ்ப்பாணம்: யாழ்பாவாணன் வெளியீட்டகம், மாதகல் கிழக்கு, 1வது பதிப்பு, ஜனவரி 2020. (திருச்சி 620 003: இனிய நந்தவனம் பதிப்பகம், எண் 17, பாய்க்காரத் தெரு, உறையூர்).