செங்கை ஆழியான் (இயற்பெயர்: க.குணராசா). யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 1வது பதிப்பு, நவம்பர் 1986. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், காங்கேசன்துறை வீதி)
32 பக்கம், விளக்கப்படங்கள், வரைபடங்கள், விலை: ரூபா 6.00, அளவு: 21×14 சமீ.
அறிவியல் நூல்வரிசையில் ஸ்ரீலங்கா புத்தகசாலையின் 2வது நூலாக வெளிவந்துள்ளது. சூரியனின் கதை (1986) என்ற நூலைத்தொடர்ந்து இரண்டாவதாக வெளிவந்திருக்கும் நூல் இது. விரிந்துவரும் அறிவியல் உண்மைகளைச் சகலரும் இலகுவில் தெரிந்துவைத்திருக்கவேண்டும் என்ற நோக்கில் பூமியின் பிறப்பு, இயக்கம் தொடர்பாக மாணவர்களுக்கேற்ற அடிப்படை அறிவியலைப் புகட்டும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பூமியின் பிறப்பு, பூமியின் அமைப்பு, பூமியின் அடர்த்தி, பாறைகள், பூமியின் வடிவம், கண்டங்களினதும் சமுத்திரங்களினதும் தோற்றம், கவசத் தட்டுக் கொள்கை, பூமியின் இயக்கங்கள், கோடைச் சூரிய கணநிலை நேரம், சமவிராக்காலங்கள், உலகின் தரைத்தோற்றம், மலைகள், மேட்டு நிலங்கள், எரிமலைகள், நீரூற்றுக்கள், பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றங்கள், பூமியின் வளங்கள் ஆகிய உபதலைப்புகளின் கீழ் விளக்கப்படங்கள் சகிதம் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 84852).