க.குணராசா. யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 82, பிரவுண் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1997. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், காங்கேசன்துறை வீதி).
(4), 216 பக்கம், அட்டவணைகள், வரைபடங்கள், விலை: ரூபா 250.00, அளவு: 26×19 சமீ.
மானிடப் புவியியல்.
க.குணராசா. யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 82, பிரவுண் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1997. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், காங்கேசன்துறை வீதி).
(6), 237 பக்கம், அட்டவணைகள், வரைபடங்கள், விலை: ரூபா 300.00, அளவு: 26×19 சமீ.
மனித வளம் (மானிடப்புவியியல்: வளர்ச்சி, நோக்கம், உள்ளடக்கம், குடிப்பெருக்கம், உலகின் குடிப்பரம்பல், குடிப்பெருக்கவாதம், இலங்கையின் குடித்தொகை, இலங்கையின் குடிப்பரம்பல், இலங்கையின் குடியமைப்பு), குடியிருப்புகள் (குடியிருப்புக்கள், குடியிருப்பு வகைகள், நகராக்கம், நகர உருவியற் கோட்பாடுகள், இலங்கையின் நகரங்கள்), பொருளாதார நடவடிக்கைகள் (விவசாய நடவடிக்கைகளை நிர்ணயிக்கும் ஏதுக்கள், உலகின் விவசாய வகைகள், செறிவான சுயதேவைப் பயிர்ச்செய்கை-நெல், இலங்கையின் நெற்செய்கை, இலங்கையின் நீர்ப்பாசனத் திட்டங்கள், வர்த்தக பெருந்தோட்டப் பயிர்செய்கை, இலங்கையின் பெருந்தோட்டப் பயிர்செய்கை, மத்தியதரைப் பயிர்ச்செய்கை, வர்த்தக தானியச் செய்கை, வர்த்தக கலப்பு வேளாண்மையும் சுயதேவைக் கலப்பு வேளாண்மையும், வர்த்தக பாற்பண்ணை வேளாண்மை), மீன்பிடி-காட்டு-சுரங்கத் தொழில்கள் (உலக மீன்பிடித்தொழில், இலங்கையின் மீன்பிடித்தொழில், உலகின் காட்டுத் தொழில்கள், இலங்கையின் காட்டுத் தொழில்கள், காட்டுத் தொழிலின் புதிய போக்குகள், வலுப்பொருட்கள், உலகின் உலோகப் பொருட்களும் உலோகமல்லாத பொருட்களும், இலங்கையின் கனிய வளங்கள்), கைத்தொழில்கள் (உலகின் பிரதான கைத்தொழிற் பிரதேசங்கள், கைத்தொழில்களை ஓரிடப்படுத்தும் ஏதுக்கள், இரும்புருக்கு தொழில்கள், பொறியியற் கைத்தொழில்கள், நெசவுக் கைத்தொழில்களும் இரசாயனக் கைத்தொழில்களும், இலங்கையின் கைத்தொழில்கள்), உலகப் பாங்கு-வியாபாரம்-போக்குவரத்து-தொடர்பாடல் (அபிவிருத்தியடைந்த நாடுகளும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளும், போக்குவரத்தும் தொடர்பாடலும், உலக வர்த்தகம்) ஆகிய ஆறு பிரதான இயல்களின்கீழ் இந்நூல் மானிடப் புவியியல் (Human Geography) என்ற பாடத்தின் 40 உபபிரிவுகளைக் கொண்டமைந்துள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 119705).