10913 சுவாமி விபுலாநந்தர் பன்முகப் பார்வை.

செ.யோகராசா, க.குமரன் (தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

x, 387 பக்கம், விலை: ரூபா 3000., அளவு: 25×17.5 சமீ., ISBN: 978-955-659-455-3.

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தரை முழுமையாகப் புரிந்துகொள்ளும் வகையில் பல்வேறு அறிஞர்களினால் எழுதப்பெற்ற ஆக்கங்களின் தொகுப்பு இது. பன்மொழிப் புலமை கைவரப்பெற்ற அடிகளார் தமிழ்ச் சூழலிலேயே முதல் தமிழ்த்துறை பேராசிரியராக நியமிக்கப்பட்டவர். அவரின் சமகாலத்தில் வாழ்ந்த தமிழறிஞர்களிலிருந்து பெரிதும் வேறுபட்டவராக, தனித்துவத்தைக் கொண்டவராக விளங்கினார் என்பதனை அவரின் ஆளுமையின் வரலாறு கூறும். இத்தகைய பின்புலத்தைக்கொண்ட அடிகளாரின் பல்பரிமாணத்தை இதிலுள்ள கட்டுரைகள் வெளிப்படுத்தத் தவறவில்லை. விபுலாநந்த அடிகளாரின் வாழ்க்கைச் சுருக்கமும் எழுத்துக்களும் பற்றிய மூன்று முன்னோடிக் கட்டுரைகளை வித்துவான் க.செபரத்தினம், செ.யோகராசா ஆகியோர் எழுதியுள்ளனர். சுவாமி விபுலாநந்தர் தொடர்பான மேலும் 48 கட்டுரைகளையும் க.கணபதிப்பிள்ளை, சு.வித்தியானந்தன், மகேஸ்வரி பாலகிருஷ்ணன், சி.தில்லைநாதன், பொ.பூலோகசிங்கம், பெ.சு.மணி, க.கைலாசபதி, ந.இரவீந்திரன், இ.முருகையன், வி.சிவசாமி, றூபி வலன்ரினா பிரான்சிஸ், அ.சண்முகதாஸ், சி.மௌனகுரு, க.அருணாசலம், க.நவசோதி, இ.பாலசுந்தரம், வண. ளு.யு.ஐ. மத்தியூ, ச.அம்பிகைபாகன், கே.எஸ்.சிவகுமாரன், சு.சுசீந்திரராசா, எம்.ஏ.நுஃமான், வ.ஆறுமுகம், ந.நடராசா, வை.கா.சிவப்பிரகாசம், வீ.அரசு, செ.யோகராசா, கா.சிவத்தம்பி, வ.மகேஸ்வரன், பழனி அரங்கசாமி, சா.இ.கமலநாதன், ஞானாம்பிகைதேவி குலேந்திரன், நா.சுப்பிரமணியன், இரா.வை.கனகரத்தினம், வ.சிவசுப்பிரமணியம், செ.வேலாயுதபிள்ளை, சோ.பத்மநாதன், வண.ஆர்.எஸ்.லோப்பு அடிகள், நஹியா ஆகியோர் எழுதியுள்ளனர்.

ஏனைய பதிவுகள்