சூரிய தீபன் (இயற்பெயர்: பா.செயப்பிரகாசம்). தமிழ்நாடு: புதுமலர் பதிப்பகம், 10/176, வைகை வீதி, வீரப்பன் சத்திரம், ஈரோடு 638 004, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2009. (சென்னை 600083: ஸ்ரீ விக்னேஷ் பிரிண்ட்ஸ், அஷோக் நகர்).
48 பக்கம், விலை: இந்திய ரூபா 20., அளவு: 21.5×14 சமீ.
தமிழக எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், 2002இல் இலங்கையின் தமிழ்ப் பிரதேசங்களில் நடந்தேறிய மானுடத்தின் தமிழ்க்கூடல் நிகழ்வு அமைப்பாளர்களின் அழைப்பையேற்று தொல்.திருமாவளவன் அணியினருடன் இலங்கைசென்ற தமிழகக்; குழுவில் இடம்பெற்றவர். பின்னாளில் வன்னிப்போரில் தமிழர்களின் படுகொலை நிகழ்வுகளை கூர்ந்து அவதானித்து தமிழகத்தின் எதிர்வினைகளை மதிப்பீடு செய்து எழுதிவந்தவர். ஈழப்போராட்டம் பற்றிய பல அரசியல் கட்டுரைகளை தமிழகத்தில் தொடர்ச்சியாக எழுதிவருபவர். இந்நூலில் அத்தகைய நான்கு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான வன்மம்-விடுதலைப் போராட்டத்திற்கு எதிராய், கருணா-ராஜபக்சே-போராடும் தமிழீழ மக்கள்: யாருக்காகப் பேசுகிறார் அ.மார்க்ஸ்?, இந்தியத் துரோகத்தின் தமிழ் வேர், சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவரா சீசரின் மனைவி? ஆகிய நான்கு கட்டுரைகளும் இலங்கையின் ஈழவிடுதலைப் போராட்ட அணுகுமுறை பற்றியவை.