மலர் வெளியீட்டுக் குழு. இணுவில்: ம.ஜெயகாந்தன், செயலாளர், இணுவில் பொது நூலகம் சனசமூக நிலையம், 1வது பதிப்பு, ஜுன்2014. (கோண்டாவில்: அன்ரா பதிப்பகம், உப்புமடம் சந்தி).
(2), 80 பக்கம், புகைப்படத் தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5 சமீ.
2014 ஜுன் இரண்டாம் நாள் இணுவில் பொது நூலகம் சனசமூக நிலையத்தில் நடைபெற்ற ஓய்வுபெற்ற ஆசிரியை திருமதி அன்னலட்சுமி சின்னராசா ஞாபகார்த்த படிப்பகத்தின் கட்டட திறப்புவிழாவின்போது வெளியிடப்பெற்ற சிறப்பு மலர். ஆசியுரைகள், வாழ்த்துரைகள், மற்றும் வாழ்த்துக் கவிதைகளுக்கு முக்கியத்துவம் தந்தள்ள இம்மலரில் பேராசிரியர் மா.சின்னத்தம்பி (கிராமிய வளர்ச்சியில் கிராமிய சனசமூக நிலையங்களும் கிராமிய நூலகங்களும்), லண்டன்-காலிங்கராஜா திலீபன் (இணுவில் பொது நூலகமும் வெளிநாட்டு அமைப்புக் குழுக்களும்), இணுவையூர் உத்திரன் (உயிர் விதை-சிறுகதை), அமரர் அன்னலட்சுமி சின்னராசா குடும்பத்தினர் (அமரர் அன்னலட்சுமி சின்னராசா அவர்களின் நினைவுப்பதிவாக பிள்ளைகள் வழங்கும் நிறைவுரை), செயலாளர் ம.ஜெயகாந்தன் (நன்றியுரை) ஆகியோரின் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.