எஸ்.அருளானந்தம். யாழ்ப்பாணம்: மறுயுகம் வெளியீடு, இல. 42, சேர் பொன் இராமநாதன் வீதி, 1வது பதிப்பு, ஜுன் 2015. (அச்சக விபரம் தரப்படவில்லை).
32 பக்கம், விலை: ரூபா 80., அளவு: 19.5×11.5 சமீ.
ஜுன் 1, 1981 இல் இலங்கை அரசபடையினரால் எரித்து அழிக்கப்பட்ட யாழ்ப்பாணப் பொது நூலகத்தின் வரலாற்றைக் கூறும் இரு கட்டுரைகளை இந்நூல் கொண்டுள்ளது. எஸ்.அருளானந்தம், மனோஷா ஆகிய இருவரும் இக் கட்டுரைகளை எழுதியிருக்கின்றார்கள்.