ந.சி.கந்தையாபிள்ளை. சென்னை 1: ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், 53-56, பவழக்காரத் தெரு, 2வது பதிப்பு, ஒக்டோபர் 1950. (சென்னை 1: The Progressive Printers).
(4), 98 பக்கம், விலை: இந்திய ரூபா 1.00, அளவு: 17×12 சமீ.
இந்நூல் மேல்நாட்டறிஞர்கள் ஆவியுலகம் பற்றி வெளியிட்ட உளவியல், இயற்கை விஞ்ஞானக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. தோற்றுவாய், ஆவியைப் பற்றிய ஆராய்ச்சி, ஆவி ஆராய்ச்சி பற்றிய வரலாற்றுச் சுருக்கம், கதவைத் தட்டிய பேய், விரிவுரை நிகழ்த்திய வேலையாள், பையனின் ஆவி, சடப்பொருள்கள் தாமே அசைதல், சில வியப்புகள், நீ யார்? இருவகை உடல், ஆவி உடல், ஆவிகளின் வடிவம், பேய்கள், ஆவிகளைப் பற்றிய சில செய்திகள், இயக்கம், ஆவிகளுடன் பேசுதல், ஆவிகள் உண்டு என்பதற்குரிய சான்றுகள், மரணம் அஞ்சத்தக்கதன்று, மரணகாலத்தில் நிகழ்வது, ஆவி உலகம், ஆவிகளுடன் பேசுதல், பெண்ணின் ஆவி கூறியவை, ஆவிகளின் நேர் பேச்சு, மீடியங்களும் ஆவியுலகப் பேச்சும், சீனர் ஆவியோடு பேச அறிந்திருந்தனர், தெளிவுக்காட்சி, கூட்டமான உயிரும் பேருயிரும் ஆகிய தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 1692).