எஸ்.ஸ்ரீராம். யாழ்ப்பாணம்: லலிதா வெளியீடு, கந்தசாமி கோவில், மாவிட்டபுரம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
(10), 461 பக்கம், ஓவியங்கள், புகைப்படங்கள், விலை: ரூபா 2500., அளவு: 29×20.5 சமீ., ISBN: 978-955-51001-3-7.
நீண்டகாலமாக ஆசிரியரின் மனதில் தோன்றி, மறைந்து சிந்திக்கவும் வாழ்வியலை புது வடிவில் நோக்கவும் தூண்டிய சிந்தனைகளின் அறுவடையே இந்நூலாகும். ஸ்ரீராம் ஆசிரியர் சரிவரத் தெரிந்து, அவரின் மனதில் பதிந்தவை இங்கு அழகியல் அம்சங்களுடன் பதிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. சொல்லிய சொல்லை மீளப்பெற முயல்வதை விட சொல்லாதிருத்தல் நல்லது, என்னால் முடியும் என்ற துணிவுடன் தொடங்குபவை வெற்றியைத் தருகின்றன என்று ஆரம்பிக்கும் ஸ்ரீராம் மகிழ்வான வாழ்க்கைக்குக் கடைப்பிடிக்கவேண்டியவற்றைச் சுட்டிக்காட்டி, உலகப் பொது மொழியாக வளரும் உடல் மொழி தொடர்பாகவும் சொல்லி, சித்திர விளக்கத்தையும் இணைத்துத் தருகிறார். இத்தகைய பல்வேறு விடயங்களை மனதில் நிலைநிறுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நூல் இது. பொருளியல்துறை முதுமாணிப் பட்டதாரியான ஆசிரியர் புவக்பிட்டிய சீ.சீ. தமிழ் மகாவித்தியாலயத்தில் பணியாற்றி வருகின்றார். பொருளாதாரமொன்றின் அறிமுகம், பொருளியல் வினாவிடை உளளிட்ட பல பொருளியல் நூல்களை எழுதியவர்.