தி.முத்தரசன். மட்டக்களப்பு: திருநாவுக்கரசு முத்தரசன், பயிலுநர், மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரி, 1வது பதிப்பு, 2002. (சங்கானை: திருமொழி அச்சகம்).
(7), 74 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
அளவையியல் பயிலும் மாணவர்களின் தேவை கருதி இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான முறையியல் (விஞ்ஞானத்தில் விஞ்ஞானிகளினதும் விஞ்ஞான முறையியலாளர்களினதும் பங்களிப்பு, விஞ்ஞான வளர்ச்சியில் விஞ்ஞானிகளது பங்களிப்பிற்கும் விஞ்ஞான முறையியலாளர்களது பங்களிப்புக்கும் இடையிலான வேறுபாடுகள்), விஞ்ஞான முறை (விஞ்ஞான முறையின் பருவங்கள், விஞ்ஞானத்தில் விஞ்ஞான முறையின் பங்கு), விஞ்ஞானத்தில் சோதனை முறைகள் (அவதானம், பரிசோதனை, கட்டுப்பாட்டுக் குழுமுறை), சமூக விஞ்ஞான ஆய்வு முறைகள் (பேட்டி, வினாக்கொத்து, தனியாள் ஆய்வு, ஏடுகளின் ஆய்வு, அகழ்வாய்வு, கள ஆய்வு, அகநோக்கு முறை, வளர்ச்சி ஆய்வுமுறை, வகைமாதிரி), விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்கு உதவும் ஏனைய முறைகள் (வரைவிலக்கணம், வகையீடு, பிரிப்பு, சான்று, அதிகாராம், ஒப்பீடு, எண்ணீடு, மில்லின் பரிசோதனை முறைகள்) ஆகிய ஐந்து பிரதான இயல்களின்கீழ் 25 பாடங்களில் இந்நூல் விளக்குகின்றது. நூலாசிரியர் மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் பயிலுநராவார். (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் ஆர். 7502).