எஸ்.எஸ்.மனோகரன். யாழ்ப்பாணம்: லொஜிக் வேவ்ஸ் பப்ளிக்கேஷன்ஸ், இல.11, குருசோ வீதி, சுண்டிக்குளி, 1வது பதிப்பு, ஜுலை 2013. (ஆனைக்கோட்டை: ரூபன் அச்சகம்).
304 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 700., அளவு: 20.5×14.5 சமீ.
வலுச்சமனான சூத்திரங்கள், தர்க்கப் படலைகள், உண்மை விருட்சமுறை, குறியீட்டாக்கம், தர்க்கப் போலிகள் ஆகிய ஐந்து பாடப் பரப்புகளை உள்ளடக்கி இந்நூல் எழுதப்பட்டுள்ளது. அளவையியலும் விஞ்ஞான முறையும் என்ற பாடத்தைக் கற்கும் மாணவர்களின் நலன்கருதி புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் ஆர்:- 14797).