11071 விஞ்ஞான முறை: பாகம் 1.

க.கேசவதாசன். கொழும்பு 6: க.கேசவதாசன், இந்து மகளிர் கல்லூரி, 23 உருத்திரா மாவத்தை, 1வது பதிப்பு, 2003. (வத்தளை: கிறிப்ஸ் பிரிண்டேர்ஸ் பிரைவேற் லிமிட்டெட், 70/7, கனல் வீதி, ஹெந்தளை).

120 பக்கம், விலை: ரூபா 185., அளவு: 21.5×15 சமீ.

அளவையியலும் விஞ்ஞானமுறையும் வினாப்பத்திரம் இரண்டுக்குரியதாகும். வினாப்பத்திரம் 2க்குரிய பாடப்பரப்பின் பொழிப்பாக இந்நூல் அமைகின்றது.  விஞ்ஞானமுறை, விஞ்ஞானம், கார்ள் பொப்பரின் பொய்ப்பித்தல் கோட்பாடு, விஞ்ஞான வகைகள், சோடிப் பதங்களும் சிறுகுறிப்புகளும் ஆகிய ஐந்து பிரிவுகளை இந்நூல் உள்ளடக்குகின்றது. மாணவர் விடை எழுதிப் பயிற்சி பெறுவதற்கேற்ப இடைவெளிகள் விடப்பட்டுள்ளன. விடை எவ்வாறு அமையவேண்டும் என்ற குறிப்புகளும் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் ஆர். 8907). 

ஏனைய பதிவுகள்

14854 மணற்கேணி: திருக்குறட் கட்டுரைகளின் தொகுப்பு.

மனோன்மணி சண்முகதாஸ், செல்வ அம்பிகை நந்தகுமாரன் (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: கோகுலம் வெளியீடு, 1வது பதிப்பு, 2017. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி). ix, 301 பக்கம், விலை: ரூபா 590.,