11095 பிரமசூத்திர சிவாத்துவித சைவபாடியம்: முதலாம் பாகம்.

ஸ்ரீநீலகண்ட சிவாசாரியார் (வடமொழி மூலம்), காசிவாசி. செந்திநாதையர் (தமிழாக்கம்). தேவிகோட்டை: ஸ்ரீ அரு. சோமசுந்தரஞ் செட்டியார், 1வது பதிப்பு, வைகாசி 1907. (தமிழ்நாடு: செந்திநாதசுவாமி யந்திரசாலை, திருமங்கலம்).

1-184 பக்கம், விலை: இந்திய ரூபா 2-0-0., அளவு: 23.5×15.5 சமீ.

வேதகாலத்தில் பாரதத்தில் நிலவிய மதம் வைதிக நெறியாகக் கடைப்பிடிக்கப்பட்டது. சமணம், பௌத்த மதங்கள் தோன்றாத அக்காலத்தில் வேதநெறி சனாதன தர்மம் என்று போற்றப்பட்டது. பின்னாளில் இவ்வேதம் சைவம், வைணவம், காணாபத்தியம், கௌமாரம், சாக்தம், சௌரம் என ஆறு சமயங்களைஉள்வாங்கிக்கொண்டது. இவற்றுள் சிவனார் வழிபாட்டைப் பொற்றுவதாக சைவம் அமைந்தது. இந்தஆறு சமயங்களையும் தாண்டி அப்பால் ஒரு தனிச் சிறப்போடு ஒளிர்வதே சைவ சித்தாந்தம். ஸ்ரீநீலகண்ட சிவாசாரியார் அருளிய பிரமசூத்திர சிவாத்துவித சைவபாடியம் சைவசித்தாந்தத்தின் சிறப்பினை வலிறுத்துகின்றது.

ஏனைய பதிவுகள்