11097 பிரமசூத்திர சிவாத்துவித சைவபாடியம்: மூன்றாம் பாகம்.

ஸ்ரீநீலகண்ட சிவாசாரியார் (வடமொழி மூலம்), காசிவாசி. செந்திநாதையர் (தமிழாக்கம்). தேவிகோட்டை: ஸ்ரீ அரு. சோமசுந்தரஞ் செட்டியார், 1வது பதிப்பு, 1908. (தமிழ்நாடு: செந்திநாதசுவாமி யந்திரசாலை, திருமங்கலம்).

401-644 பக்கம், விலை: இந்திய ரூபா 2-0-0., அளவு: 23.5×15.5 சமீ.

ஸ்ரீநீலகண்ட சிவாசாரியார் சங்கராச்சாரியார், இராமானுஜாசாரியார் முதலானோருக்கு காலத்தால் மூத்தவர். இவரது மூலநூலை தமிழாக்கம் செய்துள்ள காசிவாசி. செந்திநாதையர் 1848 ஐப்பசி இரண்டாம் திகதி யாழ்ப்பாணத்தில் குப்பிழான் என்ற சிற்றூரில் பிறந்தவர். தமிழ், வடமொழி ஆகியவற்றினை கதிர்காம ஐயரிடம் கற்றவர். 1872இல் நாவலரின் வண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஆசிரியராக நியமனம் பெற்றார். இங்கு ஆறு ஆண்டுகள் வரை கல்வி புகட்டினார். சிலகாலம் திருவனந்தபுரத்தில் தங்கியிருந்து வடமொழியில் காவியம், வியாகரணம், தருக்கம் முதலியவற்றைப் பயின்றார். 1888தொடங்கி 1898 வரை இவர் காசியில் வாழ்ந்து காசிவாசியாகினார். இவர் வரைந்த  பிரமசூத்திர சிவாத்துவித சைவபாடிய நூலுக்கு உபநிடத உபக்கிரமணிகை, பிரமசுத்திர உபக்கிரமணிகை என இரு பெரிய ஆராய்ச்சி முகவுரைகளும் இவரால் எழுதப்பட்டன.  (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10821).

ஏனைய பதிவுகள்

12715 – திரைப்பட விழாக்களின் படங்களும் அவை தொடர்பான சுவையான செய்திகளும்.

கே.எஸ்.சிவகுமாரன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல. 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2017. (சென்னை 94: ஆதிலெட்சுமி கிராஃபிக்ஸ்). xxii, 196 பக்கம்,