மு.கந்தையா. சுன்னாகம்: சைவ சமய அபிவிருத்திச் சங்கம், ஏழாலை மேற்கு, 1வது பதிப்பு, தை 1986. (சுன்னாகம்: எஸ்.பி.கே. என்ரர்பிரைஸ்).
(4), 54 பக்கம், விலை: ரூபா 10., அளவு: 21×14 சமீ.
சைவாலயம் வழிபடுவோர், பூசகர், நிர்வாகம் என்ற முத்திறத்தாரோடு தொடர்பு படுகின்றது. இம்மூன்று பிரிவினரும் தத்தம் பொறுப்புகளைச் சரிவரச் செய்வதன் மூலமே சிவாலய மகிமை தங்கியுள்ளது. பேரானந்தப் பெருவாழ்வளிக்கும் சிவபிரானை நெக்கு நெக்கு நினைந்து மேற்கொள்ளும் பணிகள் பயனுள்ள பணிகளாக அமைகின்றன. அவையே சிவப்பணிகளாக மிளிர்கின்றன. அத்துடன் பூஜைக்கு வேண்டிய வசதிகளை நிர்வாகமும், பூஜைக்குத் தேவையான உதவிகளை உபயகாரரும், பூஜாக்கிரியைகளை சிவாசாரியாரும் செய்வதென்பது மாத்திரமே சிவாலய சேவை என்றாகிவிடாது. இவ்வுண்மையை நன்குணர்ந்து இப்பணியில் ஈடுபடும் அனைவரும் சிவாலய வழிபாட்டின் உண்மை நோக்கத்தினையும், வழிமுறைகளையும் அறிந்தொழுகும் சித்தாந்த விளக்கச் சீலர்களாகத் திகழவேண்டும் என்பது இந்நூலாசிரியரின் நோக்கமாயுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 16349).