11136 பெரியதும் சிறியதும்.

வ.மகேஸ்வரன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

vii, 104 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-659-500-0.

பெரியதும் சிறியதும், கணபதியும் ஜனபதியும், இன மொழி அடையாளமாக முருகன், கந்தர்சஷ்டி கவசத்தின் சமூக உள்ளடக்கம், சாத்தனும் அரிகர புத்திரனும், சண்டேசுவரர்: சிவன் கோவில் நம்பிக்கைப் பொறுப்பாளர், இலங்கையில் சிங்கள மக்களிடையே கண்ணகி வழிபாடு: இருப்பும் நடப்பும், இந்துப் பண்பாட்டில் பெண் தெய்வங்கள்: வாழ்வும் வீழ்வும், வீரசைவ மரபும் யாழ்ப்பாணத்து வீரசைவரும், பக்தி இயக்கமும் தமிழும், ஆழ்வார்களின் பக்தி அனுபவம், சுர-அசுர யுத்தமும் துஷ்டநிக்கிரக சிஷ்ட பரிபாலனமும் ஆகிய 12 தலைப்புகளில் இத்தொகுதியில் உள்ள கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவை விநாயகர், சிவன், முருகன், ஐயப்பன், சண்டேசுவரர், பெண்தெய்வங்கள் ஆகிய கடவுளர் குறித்தும் கந்தசஷ்டி கவசம், திவ்விய பிரபந்தம், தேவாரம் ஆகிய பக்தி இலக்கியங்கள் குறித்தும் அமைந்துள்ளன. இவை எவ்வாறு பெருமரபிலும் சிறுமரபிலும் இணைந்துள்ளன என்பதை, பண்பாட்டு மானுடவியல் நோக்கில் பார்வையிடுகின்றன. நமது பண்பாட்டுச் சூழலில் பெரமரபு-சிறுமரபு என்ற இரு மரபுகளும் சகல தளங்களிலும் வேரூன்றியுள்ளன. இவை இரண்டுக்கும் இடையிலான இடையுறவு அநாதியானது. ஒன்றிலிருந்து ஒன்று தோற்றம் கொண்டது. பண்பாடு என்பது அவ்வாறான படிமலர்ச்சி கொள்ளும் என்பதுதான் மானுடவவியலாளர்களது கருத்து.  அப்பண்பாட்டுப் படிமலர்ச்சி தொடர்பான ஒருகருத்தாடலை இந்நூற் கட்டுரைகள் முன்வைக்கின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61424).

ஏனைய பதிவுகள்

16941 மன்னார் மாதோட்ட தமிழ்ப் புலவர் சரித்திரம்.

பெஞ்சமின் செல்வம். யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், செம்மணி வீதி, நல்லூர், 2வது பதிப்பு, 2020, 1வது பதிப்பு, 1978. (யாழ்ப்பாணம்: நியூ

Parti

Content Ansvarsfullt Spelande På En Casino Inte med Spelpaus Casino Tillsammans Flink Utbetalning Sam Att Testa Tillsammans På rak arm & Rapp Uttag Orsaker Till

Slots Gamble Online

Blogs Free slots 5 deposit: Position Video game How do Online slots Select Which Victories? Would it be Safer to Fool around with More than

10264 சுவாமி விபுலாநந்தரின் அடிச்சுவட்டில் கல்வி.

ப.வே. இராமகிருஷ்ணன் (மூலம்), காசுபதி நடராஜா (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டுவிழாச் சபை, 1வது பதிப்பு, பெப்ரவரி 1992. (மட்டக்களப்பு: புனித செபஸ்தியார் அச்சகம்). iv, 48 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: