மார்க்கண்டு அருள்சந்திரன். யாழ்ப்பாணம்:காவேரிக் கலாமன்றம், வன்னி நம்பிக்கை நிதியம், 1வது பதிப்பு, டிசம்பர் 2016. (யாழ்ப்பாணம்: அன்ரா பிரின்டர்ஸ்).
xiv, 186 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 2000., அளவு: 24.5×17.5 சமீ., ISBN: 978-955-41403-2-5.
கிளிநொச்சி மாவட்ட கலாசார அலுவலராகப் பணியாற்றும் மா.அருள்சந்திரன் அரங்கியல் துறையில் ஈடுபாடு கொண்டவர். யாழ்ப்பாணப் பண்பாட்டின் அடித்தளமாக இயங்கும் வணக்கஸ்தலங்களின் தகவல்களைக் கொண்ட ஆவணமாக இந்நூல் தொகுக்கப் பெற்றுள்ளது. விநாயகர் கோயில்கள், அம்மன் கோயில்கள், சிவன் கோயில்கள், முருகன் கோயில்கள், வைஷ்ணவ கோயில்கள், நாகதம்பிரான் கோயில்கள், சிறுதெய்வ கோயில்கள், கத்தோலிக்க தேவாலயங்கள், அமெரிக்கன் இலங்கை மிஷன் திருச்சபைகள், மெதடிஸ்த திருச்சபைகள், இலங்கை திருச்சபைகள், விகாரைகள், பள்ளிவாசல்கள், சமாதிக் கோயில்கள், ஆகிய தலைப்புகளில் வணக்கஸ்தலங்கள் பற்றிய சுருக்க வரலாறு புகைப்படங்களுடன் இந்நூலில் தரப்பட்டுள்ளன.