11164 விவேக வாஹினி: இராமகிருஷ்ண மிஷன் ஞாயிறு சமய பாடசாலையின் பொன்விழா மலர்: 1952-2002.

மலர் வெளியீட்டுக் குழு. கொழும்பு 6: இராமகிருஷ்ண மிஷன், 40, இராமகிருஷ்ண வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2002. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, சேர். இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை).

(4), 75 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23×17.5 சமீ.

இம்மலர் முன்னுரை (சுவாமி ஆத்மகனானந்தஜி), The Story of the Ramakrishna Mission Sunday Religious School (Swami Jivananandaji), மகான்களின் உயர்வுக்கு அவர்களது பெற்றோரின் பங்களிப்பு (சுவாமி அஜராத்மானந்தஜி), பண்பாட்டுக் கல்வியில் மனதைப் பண்படுத்துவதின் முக்கியத்துவம் (ந.கிருஷ்ணமூர்த்தி), செவ்விய வாழ்வு நல்கும் சீரியதோர் கூடம் (செல்வி வ.கணபதிப்பிள்ளை), அறநெறிப் பாடசாலையில் எனது அனுபவங்கள் (செல்வி அ.காயத்திரி), கல்வி (சுவாமி விவேகானந்தர்), பண்பு (சுவாமி விவேகானந்தர்), Reminiscences of an old boy of the Sunday Religious School (M.Sivakurunathan),அறநெறிப் பாடசாலைகள் நெறிப்படுத்தும் உயர் விழுமியங்கள் (செல்வி கஜவதனி கந்தசாமி), மறக்கவொண்ணா நினைவலைகள் (பருத்தியூர் பாலவயிரவநாதன்), யோகக் கலை (செல்வன் பிரசாத் சண்முகநாதன்), மேலை நாகரீகத்தின் தாக்கம் (செல்வி சீரடி சு.தயாநிதி, செல்வி  மோ.நிவேதிதா), சுவாமி விவேகானந்தர் காட்டிய சமுதாயக் கடமைகள் (செல்வி ரஜிலேகாஅம்பிகாவதி), அறநெறிப் பாடசாலை வாழ்க்கைக்கு வழிகாட்டும் (செல்வி கிருத்திகா சண்முகநாதன்), ஒன்றே குலம் (செல்வி சத்தியா வாமதேவன்), ஒருவனே தேவன் (செல்வி தர்ஷிகா தாமோதரம்) ஆகிய படைப்பாக்கங்களையும், மாணவர்கள் சேமித்து வழங்கிய பண விபரம், பொன்விழா போட்டிகளின் முடிவுகள், கண்காட்சி பற்றி பொதுமக்களின் கருத்துக்கள் சில, பொன்விழா ஆண்டு செயற்றிட்ட அறிக்கை ஆகியனவும்  இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39205).

ஏனைய பதிவுகள்