க.வீரகத்தி. சென்னை 600002: காந்தளகம், 4, முதல் மாடி, 834 அண்ணா சாலை, 1வது பதிப்பு, ஏப்ரல் 1988. (சென்னை 17: வேளாங்கண்ணி அச்சகம்).
36 பக்கம், விலை: இந்திய ரூபா 5., அளவு: 24×14.5 சமீ.
இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் கீரிமலை நகுலேஸ்வரத்துக்கு அண்மையில் உள்ள கருகம்பனை கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு நாகராச இராஜேஸ்வரி ஆலயத்தின் மூலதெய்வத்தின்மேற் பாடப்பெற்ற சதகம். கோபுர ஈழத்துக் கரும்பனையூர் அருள்மிகு நாக இராச இராசேசுவரி கோயில், ஓம் சக்தி காப்பு, கருணைப் பொழிவு, மஞ்சளும் குங்குமமும், பதாம்புய மோகம், ஞானப் பூஞ்சோலை, விலை வைக்கிறியே, குடமுழுக்காடும் குதூகலம், சுய வேதனையிலும் ஒரு சுகம், வெண்சங்கே முழங்கு, புதிர் போல் மறைந்தாள், கோயில் அனைத்தும் வலம்வரும் கோயில், பின்னிணைப்பு, தத்துவ மத்திய பீடம், சுகாந்த காவியம், விளக்கக் குறிப்புகள் ஆகிய தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பண்டிதர் க. வீரகத்தி இலங்கையின் வடக்கு மாகாணத்தில் கரவெட்டி கிழக்கில் வசித்தவர். தமிழ் இலக்கண ஆசிரியர். கவீ என்ற புனைபெயரில் மரபு கவிதைகள் எழுதியவர். தங்கக் கடையல் அவருடைய முதலாவது கவிதை நூல். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24632).