மட்டுவில் ஆ.நடராசா. சாவகச்சேரி: மட்டுவில் ஆ.நடராசா, ஏரகம், மட்டுவில் வடக்கு, 1வது பதிப்பு, மே 1996. (கொழும்பு 13: லட்சுமி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு).
(9), 39 பக்கம், விலை: ரூபா 45., அளவு: 19.5×12 சமீ.
கந்தபுராணத்தில் கூறப்படும் சில கருத்துக்களை, சிறு கட்டுரைகளாக எழுதி அவற்றைத் தொகுத்து இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. தவத்தின் பெருமை, தவஞ்செய்த சூரபன்மன், சந்திரசாபம், தக்கயாகம், சிவன் யோகத்தில் இருந்தார், திருக்கைலாயத்திற் சூது, அகந்தைகொண்ட வீரவாகு, அன்புசெய்த அகத்தியர், பிரமோபதேசம், திருக்கைவேல் ஆகிய பத்துத் தலைப்புக்களில் இக்கட்டுரைகள் எளிய வடிவில் எழுதப்பட்டுள்ளன.