க.கணபதிப்பிள்ளை. கரவெட்டி: க.கணபதிப்பிள்ளை, தமிழ்க் குடில், நெல்லியடி கிழக்கு, 1வது பதிப்பு, ஐப்பசி 2008. (கரவெட்டி: லெட்சுமி ஓப்செற் பிறின்டேர்ஸ், நாவலர் மடம்).
v, 101 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 18×12 சமீ. செய்யுட் பிரபந்தங்கள், உரை நூல்கள், ஆய்வு, தமிழ்த்திறன் என விரியும் பரப்பில் இவர் பதினேழு ஆக்கங்களை வழங்கியுள்ளார். அவரது 18ஆது நூல் இதுவாகும். திருமுருக கிருபானந்த வாரியாரால் செந்தமிழ்ச்செல்வர் என்ற பட்டமும், இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்களால் சிலேடைக் கவிரத்தினம் என்ற பட்டமும் இவருக்குக் கிடைத்தவை. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61167).