இரா.மயில்வாகனம் (தொகுப்பாசிரியர்). கொழும்பு: திருமதி மங்கையர்க்கரசி மயில்வகனம். 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1997. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
xxiv, 164 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21.5×14 சமீ.
1990முதல் சைவ நூல்களை எழுதிவரும் இரா.மயில்வாகனம் சிந்தனைக் கோவை, ஒன்பதாம் திருமுறை ஒரு நோக்கு, திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, இரண்டாம் சிந்தனைக் கோவை, சைவசமயிகள் அறியாதிருந்த வைரவ மான்மியம், போன்ற நூல்களைத் தொகுத்து வழங்கியவர். இந்நூல் இவரது ஐந்தாவது நூலாகும். பராசக்தியாகிய உமையம்மை தன் சிறப்பியல்புகளினால் ஆன்மாக்களை இரட்சிக்கும் தன்மை மிக விளக்கமாய் பிரதிபலிக்கும் இந்நூலில் அகங்காரம் அழிவுக்கு வித்தாகும் என்னும் கோட்பாடு விளக்கிச் செல்லப்படுகின்றது. மேலும், தேவி திருமுகம், நம பார்வதி பதி, புராண ஆரம்பம், கர்வமடக்கிய காளிகாதேவி, அருணாசலத்தில் நடந்த விளையாட்டும் வினையும், வீணாகானத்தால் வேண்டியதைப் பெற்ற விச்சாவதி, தக்கன் தவமும் தன் தவமும் ஒக்க உணர்த்திய உமை, தன்நிகரில்லா தடாதகைப் பிராட்டி, பரமனை வாங்கிய பார்வதி, பாக்கியவதியான பார்வதி, மகளின் மாப்பிள்ளையைக் காணாது மதிமயங்கி மேலே இருந்த மேனை, தேவியின் தவமும் மஹிஷனின் மதிமயக்கமும், பரமனை வாங்கிய பார்வதியும் பங்கம் விளைத்த காமனும், ரதியின் வினையை நீக்கி பயனை அடைந்த பார்வதி, வாய்கொடுத்து வார்த்தையாடிய வேதியர் தேவியோடு வீடு செல்லுதல், தேவி திருமணம், இலட்சுமி உபாக்கியானம், அறியவேண்டிய அரி அரன் பிரமேந்திராதிகள், நாநிலம் கண்டறிந்த நாரதர், மூர்த்தி விசேடம், தல விசேடம், தீர்த்த விசேடம் ஆகிய 22 தலைப்புகளில் சுவைமிகு கதைகளாக இந்நூலை வழங்கியுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 16771).