செல்வி திருச்சந்திரன் (இதழாசிரியர்). கொழும்பு 6: பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம், 58 தர்மராம வீதி, 1வது பதிப்பு, சித்திரை 1995. (கொழும்பு: கருணாரத்தின).
126 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ., ISSN: 1391-0353.
இவ்விதழில் (மலர்2:இதழ்1 சித்திரை 1995) இதழாசிரியரின் முன்னுரையுடன் கட்டுரைகள் தொடங்குகின்றன. பெண்கள் தினம் எப்படி உருவானது?, விருந்தோம்பல் பண்பாடு (ராஜம் கிருஷ்ணன்), மாயை (சுக்கிரிவி), இலக்கியத்தில் பெண் வெறுப்பு-ஒரு விளக்கம் (செல்வி திருச்சந்திரன்), சந்திப்பு (பவானி ஆழ்வாப்பிள்ளை), மூன்று சினிமாக்கள் (யமுனா ராஜேந்திரன்), முகாமைத்துவப் பதவிகளில் பெண்கள் அமரத் தயங்குவது ஏன்? (அன்னலட்சுமி இராஜதுரை), தமிழ்த் தினப் பத்திரிகைகள் காட்டும் மகளிர் நிலை (பாத்திமா சுல்பிகா), திருமணப்பாட்டு (புனரபி பாரதி), இலங்கைப் பாராளுமன்ற அரசியலில் பெண்கள் (ந.சரவணன்), பெண்களுடன் ஒரு பட்டறை (தமிழாக்கம் – சாரு நிவேதிதா) ஆகிய தலைப்புகளிலான பெண்ணிலை சார்ந்த படைப்புக்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 11689).