11301 நம் மொழியுரிமைகள்: தனிநாயக அடிகளாரின் கருத்து.

தனிநாயக அடிகள். கண்டி: ஆர்.யே.சிங்கம், தமிழ் உரிமை பாதுகாப்புக் கழகம், இல.105, கண்டி-பேராதெனிய வீதி, 3வது பதிப்பு, 1961, 1வது பதிப்பு, 1956.(கண்டி: நந்தன் பதிப்பகம், 8ஆம் நிர்., காசில் வீதி).

14 பக்கம், விலை: 50 சதம், அளவு: 21.5×13.5 சமீ.

தனிநாயகம் அடிகளாரின் மொழிச்சிந்தனைகள் இருவகையில் அமைந்தன. ஒன்று மொழியியல் கற்பித்தல் பற்றியதாகும். மற்றது தமிழ் மக்களது மொழியுரிமை பற்றியதாகும். 1956இல் தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவரப்படவிருந்தவேளையில் அதனால் ஏற்படக்கூடிய தீமைகளையும், பொதுவாக மொழியுரிமைப் பண்புகளையும் பல கட்டுரைகளில் வெளியிட்டுவந்தார். அவற்றின் தொகுப்பாக இந்நூல் அமைகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 9053).

ஏனைய பதிவுகள்

17310 முள்ளில்லா வேலி: நெடுந்தீவு நாட்டார் பாடல்கள்.

தர்மலிங்கம் ஸ்ரீபிரகாஸ். யாழ்ப்பாணம்: விமலா வெளியீட்டகம், 1வது பதிப்பு, டிசம்பர் 2023. (அச்சக விபரம் தரப்படவில்லை). 36 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×13 சமீ., ISBN: 978-624-93289-0-7. யாழ்ப்பாணம் அளவெட்டி அருணோதயக்