தொழிலாளர் தேசிய சங்கம். கொழும்பு 3: தொழிலாளர் தேசிய சங்கம். 618, 3/3 காலி வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1980. (மஸ்கெலியா: விக்டோரியா அச்சகம்).
22 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×11 சமீ.
19.10.1980 இல் மலையகத்தின் அட்டன் நகரில் நடைபெற்ற தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஒன்பதாவது மாநாட்டில் இப்பிரசுரம் வெளியிடப்பட்டது. மலையகத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை அனைத்துத் தமிழ் மக்களின் கவனத்திற்கு இச்சிறுநூல் கொண்டு செல்ல முனைகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2750).