முகம்மதுத்தம்பி முகம்மது நௌபல். மருதமுனை 3: எம்.எம்.மிஹ்லார், ஆயிஷா வெளியீட்டகம், 520/1, மசூர் மௌலானா வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2012. (கல்முனை: மொடர்ன் கிரப்பிக்ஸ்).
viii, 33 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-54169-1-7.
முகம்மதுத்தம்பி முகம்மது நௌபல் கல்முனை பிரதேச செயலாளராகப் பணியாற்றிய வேளையில் வெளியிடப்பட்ட நூல். இவர் தனது ஆரம்பக் கல்வியை பெரியநீலாவணை புலவர்மணி சரிபுத்தீன் வித்தியாலயத்தில் கற்று உயர்தரத்தை மருதமுனை அல் மனார் மகா வித்தியாலயத்தில் பூர்த்திசெய்தவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வியாபார நிர்வாகமாணிப்பட்டம் பெற்றவர். பொதுமக்கள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள் அறிந்திருக்க வேண்டிய சட்டங்கள் என இவர் தேர்ந்த 28 சட்டங்கள் பற்றி இந்நூலில் சுருக்கமாக விளக்கியிருக்கிறார். அரசியலமைப்பு, அடிப்படைஉரிமைகள், பகிரங்க சேவை ஆணைக்குழு, ஒம்புட்ஸ்மன், சட்ட வரைபு, அட்டோர்ணித் தத்துவம், நிர்வாகச் சட்டம், அரச காணிகள், அநர்த்த முகாமைத்துவம், சிறுவர் உரிமைகள், முதியோர் உரிமைகள், பராமரிப்பு மற்றும் கட்டுக்கோப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு, அனர்த்தம் மற்றும் காணாமல் போனோர் பற்றிய பதிவு, குற்றம் சம்பந்தமான விடயம், குடும்ப வன்முறை, இலங்கையில் மொழிகள், பாவனையாளர் பாதுகாப்புச் சட்டம், மனித உரிமைகள், இலஞ்சம் மற்றும் ஊழல், சமாதான அலுவலர், மத்தியஸ்தம் செய்தல், சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம், மாகாணசபைச் சட்டம், சுற்றாடல் தொடர்பாடல் சட்டம், சொத்துரிமைகள், தேசியக் கொடி விதிக் கோவை ஆகியவை பற்றிய பல தகவல்கள் இந்நுலில் இடம்பெற்றுள்ளன.