மதியாபரணன் சுமந்திரன் (இதழாசிரியர்). கொழும்பு: இலங்கை சட்டக் கல்லூரி தமிழ் மன்றம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1990. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201 டாம் வீதி).
(128) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×19 சமீ.
இலங்கைச் சட்டக்கல்லூரியின் சட்ட மாணவர் தமிழ் மன்றத்தின் 1990ஆம் ஆண்டுக்கான ஆண்டு மலர் (16-09-1990) பல்வேறு தமிழ் ஆங்கிலக் கட்டுரைகளுடன் வெளிவந்துள்ளது. இன்றைய நிலைமை அரசியலமைப்பின் முன்வைத்துள்ள கேள்விகள் (வி.புவிதரன்), நாட்டிடைச் சட்டம் ஒரு சட்டமாகுமா?(எம்.லபார் தாஹிர்), இலங்கையில் அனைவருக்கும் ஒரே திருமண, திருமண நீக்கச்சட்டம் உருவாக்கப்பட்டால் என்ன? (ஐயாத்துரை ஞானதாசன்), இவர்கள் குற்றவாளிகளா? நிரபராதிகளா? (கா.மகாலிங்க சிவம்), மனிதப் படுகொலைகளும் ஐ.நா.பாதுகாப்புச் சபையும் (கண.சுபாஸ் சந்திரபோஸ்), செயல் தானே செய்யும் விதி- RES IPSA LOOUITUR (இ.மு.இஸ்ஹர்), சட்டவியலில் ஓர் நோக்கு (லிங்கேஸ்வரி காசிப்பிள்ளை), மனதில் உறுதி வேண்டும்: சிந்தனாமிர்தம் (காமில் ஹசன்), மாசற்ற பிறழ்பகர்வுக்கு எமது நீதிமன்றங்களில் நட்டஈடு கோரமுடியுமா? (ஆஷா இராமச்சந்திரன்), உலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்களும் மூன்றாம் உலக நாடுகளும் (சந்திரகி சிவதாசன்), புனிதபூமி: ஒரு செவ்விந்தியத் தலைவரின் கடிதம் (சியால்த் Seattle) ஆகிய தமிழ்ப் படைப்புக்களும், The Law of Intellectual Property in Sri Lanka (V.Murugesu), An Interview with Dr. H.W.Tambiah (V.Puvitharan, N.Ratnasiva), Defamation (V.Ratnasabapathy), Tamil-a regional language or an official language throughout Sri Lanka (Neelan Tiruchelvam) ஆகிய ஆங்கிலக் கட்டுரைகளும், சட்ட மாணவர் சங்க அறிக்கைகளும், மாணவர்களின் கவிதைகளும் இவ்வாண்டு மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10798).