11328 வட மாகாண பொதுச் சேவையின் பதவிகளுக்கான வழிகாட்டி நூல்-2013.

பி.உமாசங்கர். கொழும்பு 9: இஸ்லாமிய புத்தக இல்லம், Islamic Book House, இல. 77, தெமட்டகொட வீதி, மருதானை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2013. (ஐ.பீ.எச். பப்ளிக்கேஷன், 77 தெமட்டகொட வீதி, மருதானை).

viii, 410 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14 சமீ.

வட மாகாணத்தில் வெற்றிடமாகவுள்ள பொதுச் சேவைகளுக்கான போட்டிப் பரீட்சைக்கு வழிகாட்டும் வகையில் பொது அறிவு விடயங்கள், உளச்சார்பு, மொழித்திறன் சார்ந்த விடயங்களும் வீதிப் போக்குவரத்து சார்ந்த விடயங்களும் கடந்தகால வினா-விடைகளும் இடம்பெற்றுள்ளன. இலங்கை தொழில்நுட்பவியல் சேவையின் விவசாயப் போதனாசிரியர் பயிலுநர் பதவி, இலங்கை தொழில்நுட்பவியல் சேவையின் விவசாயப் போதனாசிரியர்-வகுப்பு III பதவி, காணி நிர்வாகத் திணைக்கள வெளிக்கள போதனாசிரியர் பதவி, வட மாகாணப் பொதுச் சேவையின் முகாமை உதவியாளர் சேவை வகுப்பு III பதவி , வடமாகாண பொதுச் சேவைக்கு சாரதி சேவையின் பதவி வகுப்பு III ஆகியவற்றுக்குப் பொருத்தமான வழிகாட்டி.  (நல்லூர் பிரதேச சபை நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் C 12931)

ஏனைய பதிவுகள்

14488 ஆர்ட் லாப் (Art Lab) இதழ் 1.

ஜெகத் வீரசிங்க (பிரதம ஆசிரியர்), அனோலி பெரேரா (முகாமைத்துவ ஆசிரியர்), ஆனந்த திஸ்ஸகுமார, தா.சனாதனன், பாக்கியநாதன் அகிலன். கொழும்பு: தீர்த்த சர்வதேச கலைஞர்களின் கூட்டிணைப்பு, இணை வெளியீடு, ஹ{வோஸ் நிறுவனம், 1வது பதிப்பு, 2004.