கொழும்பு 7: அனர்த்த முகாமைத்துவ நிலையம், அனர்த்த முகாமைத்துவ தேசியப் பேரவை, அனர்த்த முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சு, 120/2, வித்யா மாவத்தை, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
65 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29.5×21 சமீ.
2005 மே 13ஆம் திகதி இலங்கைப் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட 2005ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க இலங்கை அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தின் பிரகாரம் அனர்த்த முகாமைத்துவ தேசியப் பேரவையின் கீழ் அனர்த்த முகாமைத்துவ நிலையம் (அ.மு.நி) தாபிக்கப்பட்டது. தற்போது அ.மு.நி. அனர்த்த முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சின் செயற்பரப்பின் கீழ் தொழிற்படுகின்றது. தகுந்த அனர்த்த முகாமைத்துவத் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு பொருத்தமான முறைமைகளைப் பயன்படுத்தி ஆபத்து மற்றும் இடர் தொடர்பான தகவல்களை வழங்குதல் என்பது இவ்வமைப்பின் முக்கிய நோக்கமாகும். எதிர்காலத்தில் நிகழக்கூடிய இழப்புகளுக்கான இடர் குறைப்பு உபாயங்களை வகுத்து நடைமுறைப்படுத்தலும் இவ்வமைப்பின் பல்வேறு பணிகளுள் ஒன்றாகும். நாட்டில் ஒட்டுமொத்த அனர்த்த இடர் குறைப்பு நடவடிக்கை முறையை முகாமைத்துவம் செய்வதில் அமைச்சுகள், திணைக்களங்கள், முகவராண்மைகள், அதிகார சபைகள் மற்றும் உள்ளூராட்சி அதிகார சபைகளுடன் தேசிய, ஈடைநிலை மற்றும் கிராம சேவகர் மட்டங்களிலும் இராணுவப்படைகள், பொலிஸ், சர்வதேச மற்றும் தேசிய அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆகியவற்றுடனும் அ.மு.நி. ஒருங்கிணைப்பையும் ஒத்துழைப்பையும் மேற்கொள்ளும். அதன் பணிகளை விபரிப்பதும் அ.மு.நிலையத்தின் பணியாகும். இந்நூலில் பணிச்சட்டகத்தின் நோக்கமும், குறிக்கோளும் இலக்கு வைக்கப்படும் பங்களிப்பாளர்கள், இலங்கையில் காணப்படும் சமூக அடிப்படையிலான இடர் முகாமைத்துவ முறைமைகள், கற்றுக்கொண்ட முக்கிய பாடங்கள், சமூக மீட்டெழுச்சி பணிச்சட்டகம், பிரதான அமுலாக்கல் உபாயங்கள், மீட்டெழுச்சி மற்றும் நிலைபேற்றினை அளவிடுதல் ஆகிய ஏழு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.