த.கலாமணி. பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2016. (பருத்தித்துறை: பரணீஅச்சகம், நெல்லியடி).
(6), 94 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-4676-49-7.
இந்நூலில் ஆசிரியமும் உலகியல் மாற்றங்களினூடான அறைகூவலும், ஆசிரிய தலைமைத்துவத்தின் தேவையும் அதன் பின்னணியும், வாண்மை விருத்தியும் மென்திறன்களும், கட்டிளமைப் பருவத்தினரை விளங்கிக்கொள்ளல், கணிப்பீடும் மதிப்பீடும் பாடசாலை அடிப்படையிலானது மாணவர் அடிப்படையிலானது-சுயமதிப்பீடு, அனுபவவழிக் கற்றல், 5S அணுகுமுறை – 5ளு ஒழுக்கமும் அதன் தூண்களும், அளிக்கைத் திறன்கள், பாடசாலை மாணவர்களின் உற்பத்தித் திறன் மேம்பாட்டுக்கான ‘கைசன்’, தொழிற் சூழலில் முரண்பாட்டு உணர்திறன், பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான பயனுள்ள குறிப்புகள் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட பதினொரு ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நூலாசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்வியியல்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளராவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61491).