11350 மாணவர் மனதிற்கு.

ரா.ப.அரூஸ். கிண்ணியா 03: கே.ஐ. ஊடகக் குழு, மஹ்ரூப் நகர், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2011. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).

110 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 18×13 சமீ., ISBN: 978-955-52299-3-7.

புதியதோர் சிந்தனைப் புரட்சி மாணவர்களிடமிருந்து உதயமாகுவதற்கும் அதனூடு மானிடம் எழுச்சிபெறுவதற்கும் இந்நூல் பெரிதும் துணைபுரிய வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நிலைமை எவ்வாறு காணப்படுகின்றது என்பதையும் பிழையான கற்றலையும் கற்றல் முறையையும் மாற்றுவதற்குத் தேவையான ஆலோசனைகளையும் வழங்குவதாக இந்நூல் அமைந்துள்ளது. பாடசாலைகள் எதற்கு, மதிப்பிழந்து கிடக்கும் இலவசக் கல்வி, ஆசிரியர்களிடமிருந்து தப்பித்தல்,  நல்ல ஆசான்களை மதித்தல், வாசிப்பினால் பூரணமடைதல்,  மாணவப் பருவத்துத் தவறுகள், நவீன கலாச்சாரத்துக்குள் மாணவர் சமுதாயம் எப்படிச் சீரழிகின்றது, மாணவர் சமுதாயம் லிழித்தெழ செய்யவெண்டியதென்ன எனப் பல விடயங்களை இந்நூல் விவாதிக்கின்றது.  திருக்கோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அரூஸ் தீப்பிடித்த பூக்கள், எனது சாம்ராஜ்யம், ஏனெனில் நான் மனிதன் போன்ற 21 நூல்களை இதுவரை எழுதியுள்ளார்.

ஏனைய பதிவுகள்