11352 முன்பள்ளிக் கல்வி: கலைத்திட்டமும் வழிகாட்டலும்.

எம்.எச்.எம்.ஹஸன். மாவனல்ல: எம்.எச்.எம்.ஹஸன், 61/5, ஸாஹிரா வீதி, 1வது பதிப்பு, 2014. (ஐ.பீ.எச். பப்ளிக்கேஷன், 77 தெமட்டகொட வீதி, மருதானை).

xvi, 130 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 22×15 சமீ.

முன்பள்ளி எண்ணக்கரு, முன்பிள்ளைப் பருவம், முன்பள்ளியின் கட்டமைப்பு, முன்பள்ளியின் முகாமைத்துவக் கட்டமைப்பு, முன்பள்ளி ஆசிரியை, விஷேட தேவையுடைய பிள்ளைகள், உடல் விருத்திச் செயற்பாடுகள், கையாக்கற் திறன் விருத்திச் செயற்பாடுகள், மொழி விருத்திச் செயற்பாடுகள், கணித எண்ணக்கரு விருத்தி, சூழல் பற்றிய தேடல், அழகியல் திறன்களை விருத்தி செய்தல், மன எழுச்சி விருத்தி, பாதுகாப்புணர்வை விருத்திசெய்தல், சமூக விருத்தியை எற்படுத்தல், முன்பள்ளிப் பிள்ளைகளின் போசாக்கு விருத்தி, பிள்ளை நேயக் கற்றல், நடத்தை உருவாக்கம், முறைசார் கல்விக்குத் தயார் படுத்தல் ஆகிய 19 அத்தியாயத் தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. தேசிய கல்வி நிறுவனத்தின் பிரதம செயற்திட்ட அதிகாரியாகக் கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ள எம்.எச்.எம். ஹஸன், பட்டதாரி ஆசிரியராகவும், பின்னர் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் பதிப்பாசிரியராகவும் பணியாற்றியவர். தேசிய கல்வி நிறுவனத்தின்  செயற்திட்ட அதிகாரியாகவும் 18 ஆண்டுகள் பணியாற்றியவர். மாவனல்ல முன்பள்ளி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் தலைவராகவும் இவர் கடமையாற்றுகின்றார். (இந்நூல் கொழும்புப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 67553). 

ஏனைய பதிவுகள்