மலர்க் குழு. கிளிநொச்சி: றோயல் கல்வி நிலையம், 21/1, கனகபுரம், 1வது பதிப்பு, 2015. (கிளிநொச்சி: மல்ரி கலர் பிரிண்டேர்ஸ்).
xxii, 203 பக்கம், விளக்கப்படங்கள், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18.5 சமீ.
கிளிநொச்சி மண்ணின் புகழ்பூத்த கல்வி நிலையங்களில் ஒன்றான றோயல் கல்வி நிலையம் 27.10.2015அன்று தனது வெள்ளிவிழாவை சிறப்பாகக் கொண்டாடியது.
நிலையத்தின் இயக்குனர் குமாரின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடக்கு மகாண பிரதி கல்விப்பணிப்பாளர் மாரிமுத்து தேவேந்திரன் கலந்து கொண்டார். அவ்வேளையில் வெளியிடப்பெற்ற சிறப்பு மலர் இது. ச.குமார், மாரிமுத்து அகிலநாயகம், குமார் புவனேஸ்வரி, சிவபாலன் சுலோஜினி, சற்குருநாதன் சுரேசன், சுந்தரலிங்கம் லோகேஸ்வரன், குமார் பார்த்தீபன் ஆகியோர் மலர்க்குழு உறுப்பினராகப் பணியாற்றியுள்ளனர். பாடசாலை பற்றியும், கிளிநொச்சிப் பிரதேசம் பற்றியும், கற்கைநெறிகள் தொடர்பாகவும் ஆசிரியர்களாலும் மாணவர்களாலும் எழுதப்பெற்ற 51 படைப்புகளை இம்மலர் உள்ளடக்கியுள்ளது.