11406 தமிழ்: தரம் 13.

இளங்கோ (தொகுப்பாசிரியர்). கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14 டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, 1வது பதிப்பு, மே 2010. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, கு.டு.1/14 டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

iv, 242 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14 சமீ.

க.பொ.த. உயர்தர வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் 2009ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமையத் தரம் 13இல் கற்கும் மாணவர்களுக்கான தமிழ்ப் பாடத்திற்கான பாடப்பகுதிகளாகச் சங்ககாலம் முதல் இக்காலம் வரையான 11 செய்யுட்பகுதிகளும் மூன்று கட்டுரைகளும் நான்கு சிறுகதைகளும் இந்நூலில் ஒருங்கே தரப்பட்டுள்ளன. நற்றிணை, திருக்குறள், மணிமேகலை, கம்பராமாயணம்-கைகேயி சூழ்வினைப் படலம், சீறாப்புராணம்- மழையழைப்பித்த படலம், தனிப்பாடல் திரட்டு, பாரதிதாசன் கவிதைகள், கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை பாடல்-சூரியகாந்தி, முருகையன் கவிதை- மாமாடு என்ற பல.., சுபத்திரன் கவிதை- ஆண்டவன் நீதானா, குறிஞ்சித் தென்னவன் கவிதை- சம்பள நாள், தமிழ்ச் செல்வாக்கு-தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், பாரதியார்- சுவாமி விபுலாநந்தர், மனவலிமை வேண்டும்- டாக்டர் மு.வரதராசனார், யுகசந்தி-ஜெயகாந்தன், தாய்- வ.அ.இராசரத்தினம், ஒரு கூடைக் கொழுந்து- என்.எஸ்.எம்.இராமையா, ஒளி-மருதூர்க் கொத்தன், மாதிரி வினாக்கள் ஆகிய 19 அத்தியாயத் தலைப்புகளின் கீழ் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் ஆர்:- 14810). 

ஏனைய பதிவுகள்