கல்வி வெளியீட்டுத் திணைக்களம். கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 1வது பதிப்பு, 1980. (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்).
195 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×13.5 சமீ.
கணிதம் 9-1.
கல்வி வெளியீட்டுத் திணைக்களம். கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 2வது பதிப்பு, 1981, 1வது பதிப்பு, 1980. (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்).
(12), 195 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×13.5 சமீ.
கல்வி அமைச்சின் 1979ஆம் ஆண்டுப் பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்ட நூல். பதிப்பாசிரியர்களாக நா.சுந்தரலிங்கம், திருமதி சி.பரமநாதன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். பதின்மர்கொண்ட ஆசிரியர் குழுவால் உருவாக்கப்பட்ட சிங்கள மூல நூலானது, த.கனகரத்தினம், இ.முருகையன், வீ.கே.நல்லையா, நா.சுந்தரலிங்கம், திருமதி சி.பரமநாதன் ஆகியோர் கொண்ட ஐவர் குழுவினால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நூல் காரணிகளும் மடங்குகளும், பின்னங்கள், தசமங்கள், வர்க்கமூலங்கள், விகிதமும் விகிதசமமும், குறியீடுகள், குறிகள், கோவைகள், எளிய சமன்பாடுகள், அட்சரகணிதக் கோவைகளின் பெருக்கலும் வகுத்தலும், ஒருங்கமை சமன்பாடுகள், வரைபுகள், தளநேர்கோட்டு உருவங்கள், முக்கோணிகளின் ஒருங்கிசைவு, முக்கோணிகளின் சமமின்மை, நாற்பக்கல், ஒரு நேர்கோட்டைப் பல சமபகுதிகளாகப் பிரித்தல் ஆகிய அத்தியாயங்களில்; எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 11204).