ஸ்ரீ அ.க.சர்மா. யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1958. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா அச்சகம், 234, காங்கேசன்துறை வீதி).
Lx, (12), 432 பக்கம், விளக்கப்படங்கள்;, விலை: ரூபா 8.00, அளவு: 21.5×14 சமீ.
இலங்கை அரசினர் சிரேஷ்ட தகுதிப் பத்திரத் தேர்வுப் பாடத்திட்டத்திற்கிணங்க எழுதப்பட்டது. இரசாயனம், பௌதிக இரசாயன மாற்றங்கள், சடப்பொருளின் வகை, சடப்பொருளின் அமைப்பு, மூலங்களுக்குப் பெயரிடுதல், வாயுக்களின் பௌதிகப் பண்பு, இரசாயனச் சேர்க்கை விதிகள் பொருளியைபு விதிகள், சமவலுநிறை, மூலகங்களின் வலுவளவு, சூத்திரங்களும் சமன்பாடுகளும், அவகாதரோவின் கருதுகோள், இரசாயன மாற்றங்கள், ஐதைரசன், ஒட்சிசன், தாக்கவூக்கம், அமிலங்கள், உப்புமூலங்கள், மின்பகுப்பு, அமிலவலுவளவும், காரவலுவளவும், ஓசோனும் ஐதரசன் பரவொட்சைட்டும், ஒட்சியேற்றமும் தாழ்த்தலும், கந்தகமும் ஐதரசன் சல்பைட்டும், கந்தகவிருவொட்சைட்டு, கந்தகமூலவொட்சைட்டு, சல்பூரிக் அமிலம், நைதரசனும் அமோனியாவும், நைதரசன் ஒட்சைட்டுகள், நைத்திரிக் அமிலமும் நைத்திரேட்டுகளும், நைதரசனும் உலகில் உணவாக அதன் அவசியமும், உப்பாக்கிகள், புரோமீனும் அயடீனும், காபனும் காபனீரொட்சைட்டும், காபனோரொட்சைட்டு, ஐதரோகாபன் வாயுக்கள், நிலக்கரிவாயு, தகனமும் சுவாலையும், சிலிக்கன் சிலிக்கா சிலிக்கேற்றுகள், பொசுபரசும் அதன் சேர்வைகளும், நீர், உலோகங்கள், சோடியமும் பொற்றாசியமும், கல்சியம், மகனீசியமும் நாகமும், செம்பும் ஈயமும், இரும்பும் உருக்கும் ஆகிய பாடங்களை உள்ளடக்கியதாக 39 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. தமிழிலே இரசாயனம், இரசாயனக் கலையை வளர்த்த சில அறிஞர்களின் வாழ்க்கைக் குறிப்புகள், மாணவர்கள் எளிதில் கற்றுக்கொள்ளச் சில ஞாபகக் குறிப்புகள் ஆகியவை இந்நூலின் பின்னிணைப்பாக உள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13358).