11428 சேதன இரசாயனவியல்.

அருண பண்டார ரணதுங்க, றிஸ்வான் எம்.சலாஹீதீன். மெனிக்ஹின்ன: AB Publishers, இல. 144, நாபான, 1வது பதிப்பு, பெப்ரவரி 2012. (மாத்தளை: ஸல்காலிங்க் ஓப்செட் பிரின்டர்ஸ், இல. 10, பிரதான வீதி).

(9), 335 பக்கம், விளக்கப்படங்கள், வரைபடங்கள், அட்டவணைகள், விலை: ரூபா 750., அளவு: 22×14 சமீ., ISBN: 978-955-0753-01-7.

சேதன இரசாயனவியலின் அறிமுகம் முதலாவது இயலாகவும், சேதன இரசாயனவியலின்  அடிப்படை எண்ணக்கருக்கள் இரண்டாவது இயலாகவும் அமைகின்றன. இவ்விரண்டாம் இயலில் சேதன இரசாயனவியலின் அளவறி பகுப்பு, சேதன இரசாயனவியலின் பண்பறி பகுப்பு ஆகிய இரு பாடங்கள் விளக்கப்பட்டுள்ளன. மூன்றாவதாக சேதன சேர்வைகள் என்ற பிரதான பிரிவு இடம்பெற்றுள்ளது. இப்பிரிவில் அற்கேன்கள், அற்கீன்கள், அற்கைன்கள், பென்சீன், அற்கைல் ஏலைட்டுகள், அற்ககோல்கள், பீனோல், காபனைல் சேர்வைகள் (அல்டிகைட்டுகளும் கீற்றோன்களும்), காபொட்சிலிக் அமிலங்கள், காபொட்சிலிக் அமில குளோரைட்டுகள், எசுத்தர்கள், அமைட்டுகள், அமீன்கள், அனிலீன், பென்சீன் ஈரசோனியம் குளோரைட்டு ஆகிய 15 சேதனச் சேர்வைகள் பற்றி விளக்கப்படுகின்றது. இறுதிப்பிரிவாக சமபகுதித்தன்மை பற்றி விளக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் ஆர்:- 13129). 

ஏனைய பதிவுகள்

Warteschlange dutzend des teufels

Content Übersetzungen Je auf Angewandten Blick Im Teutonisch, Englisch | Mehr Hilfe “angewandten Anblick Auf Jemanden Etwas Schmettern” Aktuelle Waren Bei keramiken sei, ended up

15649 ஜீவபிரயத்தனம்: நாடகங்கள் ஏழு.

யோ.யோண்சன் ராஜ்குமார். யாழ்ப்பாணம்: கலைச்சோலை, 793 (425), நாவலர் வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2021. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், இல. 10,  முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). xiv, 196 பக்கம், விலை: