11430 பௌதிக இரசாயனம்: உயர்தரத்துக்கும் புலமைப் பரிசில் தரத்துக்கும் உரியது.

L.H.அங்கஸ். கொழும்பு 3: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், சிறீமதிபாயா, 58, சேர் ஏணெஸ்ட் டி சில்வா மாவத்தை, 1வது பதிப்பு, 1968. (கொழும்பு: அரசாங்க அச்சகம்).

(16), 480 பக்கம், விளக்கப்படங்கள், அளவு: 21×14 சமீ.

பிரித்தானியாவின், பிளிமத்திலுள்ள, ஆண்களுக்கான டெவன்போற் உயர்நிலைப் பாடசாலையின் இரசாயனப் பிரிவின் முதல்வரான L.H.அங்கஸ் Physical Chemistry என்ற தலைப்பில் எழுதி Uiversity Tutorial Press நிறுவனத்தால் வெளியிடப்பட்ட நூலின் தமிழாக்கம். இதில் இயக்க மூலக்கூற்றுக்கொள்கை, கரைசல்கள், பரம்பல் தோற்றப்பாடு, வாயுக்களின் கரைதிறன், பழைய அணுக்கொள்கை, வெப்பக்கூட்டப் பிரிவு, இலச்சற்றலியேயின் கோட்பாடு, திணிவுத்தாக்க விதி, வெப்ப இரசாயனம், மின்னிரசாயனம்-1, அணுக்கள் மூலக்கூறுகளின் கட்டமைப்பு, மின்னிரசாயனம் -2, மின்பகு பொருட்களில் சமநிலைகள், கலங்களும் மின்பகுப்பும், கூழ்க் கரைசல்கள், ஊக்கல், அவத்தைச் சமநிலைகள் ஆகிய 14 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13359).

ஏனைய பதிவுகள்

12009 – பேராசிரியர் சோ.சந்திரசேகரனின் ஆக்கங்கள்: நூல்விபரப் பட்டியல்.

எம்.ஐ. நிஸாமுதீன், நீலாம்பிகை நாகலிங்கம் (தொகுப்பாசிரியர்கள்), எம்.பீ.எம்.பைரூஸ் (பதிப்பாசிரியர்). கொழும்பு: வெளியீட்டு விபரம், பதிப்பு ஆண்டு தரப்படவில்லை. (கொழும்பு 12: குமரன் பதிப்பகம், 361, ½, டாம் வீதி). 93 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

16101 நல்லைக்குமரன் மலர் 2010.

நல்லையா விஜயசுந்தரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 2010. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், 15/2B, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). 218 + (82) பக்கம், புகைப்படங்கள், தகடுகள்,