கே.ரி.இராஜகுலவீரசிங்கம். யாழ்ப்பாணம்: கா.தியாகராசா, அருளகம், கைதடி கிழக்கு, கைதடி, 1வது பதிப்பு, மார்கழி 1981. (யாழ்ப்பாணம்: ராஜா அச்சகம், சங்கானை வீதி, அச்சுவேலி).
277 பக்கம், விலை: ரூபா 22.00, அளவு: 20×13 சமீ.
புதிய க.பொ.த.ப.(உயர்), தொழில்நுட்பக் கல்லூரி, கணக்கியல், வங்கியியல் பரீட்சைகளுக்கு உகந்ததாகத் தயாரிக்கப்பட்ட நூல். இலங்கைப் பட்டயக் கணக்காளர், செலவுக் கணக்காளர் வினாப்பத்திரங்களைத் தழுவிப் பயிற்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. கணக்காளராகப் பணியாற்றும் நூலாசிரியர் பொருளியல் சிறப்புப் பட்டதாரியாவார். யாழ்.தொழில்நுட்பக் கல்லூரியிலும் பலாலி ஆசிரியர் கலாசாலையிலும் கற்கும் கணக்கியல்துறை மாணவர்களுக்கும் வங்கியாளர் நிறுவனப் பரீட்சைக்குத் தயார்செய்யும் மாணவர்கட்கும் பல ஆண்டுகளாக கணக்கியல் பாடத்தைப் போதித்த அனுபவ வெளிப்பாடாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 11210).