நிமல் பண்டா (சிங்கள மூலம்), க.துரைரட்ணம் (தமிழாக்கம்). கொழும்பு 10: சூரிய வெளியீட்டகம், 614 G 13, பியதாச சிறிசேன மாவத்தை, மருதானை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1998. (கொழும்பு 9: S and S Printers, 33 School Lane).
(8), 9-139 பக்கம், ஓவியங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ., ISBN: 955-9348-50-7.
சிங்கள மொழியில் ‘நெல்லி கலே வீரயோ’ என்ற தலைப்பில் தன் முதற்பதிப்பை 1990இல் கண்ட இந்நூல், தனது நான்காம் பதிப்பை 1997இல் கண்டிருந்த வேளையில் ஆங்கிலத்திற்கு மொழிமாற்றம்; செய்யப்பெற்று ஆங்கிலப் பதிப்பும் 1997இல் வெளியிடப்பட்டது. பின்னர் அதன் தமிழ் மொழிபெயர்ப்பு 1998இல் வெளிவந்துள்ளது. இக்கதை இலங்கையின் மலையகக் கிராமமொன்றினைப் பின்னணியாகக் கொண்டது. தேயிலைத் தோட்டங்களால் சூழப்பெற்ற அழகிய கிராமமொன்றில் வாழும் மூன்று சிறுவர்களின் துணிகரச் செயல்கள் பற்றியது இக்கதை. ஏழைகள் அன்றாடம் படும் துன்பங்களையும் இது செவ்வனே சித்திரிக்கின்றது. மேலும் நாம் வாழ்க்கையில் மிகஅரிதாகச் சந்திக்கும் பாத்திரங்களான பிறர்க்குதவும் மனோபாவம் கொண்ட ஒரு சில பணக்காரர்களையும் இக்கதையில் காண்கிறோம். சமூக விரோதச் செயல்கள் மூலம் பணமீட்ட முயலும் ஒரு கூட்டத்தினரைப் பற்றியும் இக்கதை பேசுகின்றது. சாரணர் இயக்கம் எவ்வாறு தீயவழியில் செல்லவிருந்த சிறுவர்களை நல்வழிப்படுத்தி வீட்டுக்கும் நாட்டுக்கும் சிறந்தவர்களாக மாற்றுவதை இக்கதை கூறுகின்றது. தூய நட்பின் ஆழத்தையும், சாரணர் இயக்கம் மூலம் இனங்களுக்கிடையே ஐக்கியத்தையும் புரிந்துணர்வையும் சகோதரத்துவத்தையும் ஏற்படுத்தலாம் என்பதையும் இக்கதை நன்கு உணர்த்துகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21146).