எம்.எஸ்.ஸ்ரீதயாளன். கொழும்பு 4: ஸ்ரீ ஜனனி பப்ளிஷர்ஸ், 137,காலி வீதி, பம்பலப்பிட்டி, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: ஜஸ்மின் பிரின்டர்ஸ், வெள்ளவத்தை).
16 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 25×17.5 சமீ.
மனதை நெகிழவைக்கும் மாண்புறு மாக்கதைகள் என்ற தொடரில் வெளிவந்துள்ள முதலாவது சிறுவர் இலக்கிய நூல். கதாப்பிரசங்கக் கலையை இளஞ்சிறார்களிடையே அறிமுகப்படுத்தும் நோக்கில் எழுதப்பட்ட இந்நூலில், மனுநீதி கண்ட சோழனின் கதையை முன்னுதாரணமாக்கி அதனை கதாப்பிரசங்க வடிவில் ஆக்கித்தந்து அதனூடாக சிறார்களிடையே கதாப்பிரசங்கக் கலை பற்றிய புரிந்துணர்வினை வளர்க்க ஆசிரியர் முற்பட்டுள்ளார்.