ப.சிவானந்த சர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்). யாழ்ப்பாணம்: சர்வானந்தமய பீடம், கந்தசாமி கோவிலடி, இணுவில், சுன்னாகம், 1வது பதிப்பு, செப்டெம்பர்; 2016. (சுன்னாகம்: கஜாநந்த் பிரின்டர்ஸ், மானிப்பாய் வீதி, இணுவில்).
88 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-4078-04-8.
ஆசிரியர் அவ்வப்போது சம்ஸ்கிருத மொழியில் இயற்றி வழங்கிய ஸ்தோத்திரங்கள் (செய்யுள் வடிவம்), நாமார்ச்சனைகள் (செய்யுள் வடிவம்), நிறுவன கீதங்கள் (செய்யுள் வடிவம்), வாழ்த்துப் பத்திரங்கள் (செய்யுள் வடிவம்), அழைப்பிதழ்கள் (வசன வடிவம்), மொழிபெயர்ப்பு (செய்யுள் வடிவம்) ஆகியவற்றை இந்நூலில் தொகுத்து வழங்கியிருக்கிறார். யாழ்ப்பாணத்தின் கோப்பாயைப் பூர்வீகமாகக் கொண்ட பிரம்மஸ்ரீ சிவானந்த சர்மா ‘கோப்பாய் சிவம்’ என அன்பாக அழைக்கப்படுபவர். பாரத்வாஜ கோத்திரத்தைச் சார்ந்தவர். சிறுவயது முதல் தமது தந்தையாராகிய சம்ஸ்கிருத பண்டிதர் பிரம்மஸ்ரீ ச. பஞ்சாட்சர சர்மாவிடம் கசடறக் கற்றவர். இளமையிலிருந்தே இலக்கிய ரசனையுடையவர். எழுத்தாளர், கவிஞர், விமர்சகர். ஆக்க இலக்கிய கர்த்தாவாக சம்ஸ்கிருதம், தமிழ் ஆகிய இருமொழிப் புலங்களினூடாகப் பங்களிப்புச் செய்துவருபவர். தமது சம்ஸ்கிருத மொழிப் புலமையின் தளத்திலிருந்து தமிழ் மொழி வளத்திற்கு புதுமை படைப்பவர்.