மருதமைந்தன் (இயற்பெயர்: எம்.எஸ்.எஸ்.ஹமீட்). கொழும்பு 11: எம்.சீ.எம்.மன்சூர், 168/16, 2வது குறுக்குத்தெரு, 1வது பதிப்பு, ஜுன் 2002. (சென்னை 600001: மாஹின் பிரிண்டர்ஸ், 29, அப்பு மேஸ்திரி தெரு).
48 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×13.5 சமீ.
பல்வேறு அறிவுரைகளை மகனுக்குத் தந்தை எடுத்தியம்பும் பாங்கில் எழுதப்பட்ட நல்லுரை நூறு என்ற கவிதைதொடரை வீரகேசரி நாளிதழ்களில் எழுதியிருந்த மருதமைந்தன் அத்தொடரையும், பின்னதாகத் தான் இறைநபியின் திருவாக்குகளைக் கருவாகக் கொண்டு மகளுக்குத் தந்தை எடுத்துச் சொல்லும் வகையில் இயற்றப்பட்ட அமுது என்ற தலைப்பிலான கவிதைகளையும் இணைத்து அமுதுக்கலசம் என்ற இக்கவிதைத் தொகுதியை நூலுருவாக்கித் தந்துள்ளார். இக்கவிதைகள் எளிய நடையான சிந்து நடையில் எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28156).