சு.சிவமலர். தெல்லிப்பழை: கலை இலக்கியக் களம், 1வது பதிப்பு, நவம்பர் 2015. (யாழ்ப்பாணம்: அம்மா அச்சகம், இணுவில்).
xvi, 52 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20×14.5 சமீ.
சிவமலர் சுந்தரபாரதி மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையின் அதிபராகப் பணிபுரிபவர். இவரது முதலாவது கவிதைத் தொகுப்பு இதுவாகும். விஞ்ஞான பாடத்தை மாணவர்களுக்குக் கற்பிக்கும் கற்பித்தல் சாதனமாகப் பயன்படுத்தத்தக்க சில கவிதைகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. டெங்கு தவிர்ப்போம், முதுமை காப்போம், தெய்வ அன்னை தெரேசா, வண்ணம் கொண்டு வாழ்ந்திடலாம், உளவளத்துணை காக்கும், வாழவேண்டுகிறேன், விசையும் இயக்கமும், சக்தி இழக்குது மூச்சினிலே, வரமொன்று தந்திடுவீர், ஆசிரியர் தின விழா, சுவாசத் தொகுதி, வீரர் நாமோ, விதியை வெல்வோம், நகை தவிர் நலம் பெறு, விடுகதை அவிழ்ப்பீரோ, மேன்மை பெற்றிடுவோம், வளமுயர்வுண்டாம், அடைக்கலம், பலமிகு நங்காய் பார்த்து நடப்பாய், அவனியில் வாழ்வாய், தாரிலும் நீரிலும் உயிர்காத்திடலாம், கண்ணிவெடி, கொள்ளை அழகு பாரும், தோல்வியைக் கண்டு துவழாதே, மாணவம் பேணிடுவோம், உணவைப் பேணுவோம், மணிவாசகரால் மாண்பு பெறலாம், உன்னால் முடியும், கூற்றினைத் தடுத்திடு, அறிஞர் கலாம் ஆகிய தலைப்புகளில் எழுதப்பெற்ற கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 60737).