சர்வேஸ்வரி கதிரித்தம்பி. ஜேர்மனி: செல்வி சர்வேஸ்வரி கதிரித்தம்பி, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
(64) பக்கம், ஓவியங்கள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.
லண்டன் தமிழ் வானொலியின் வழியாகத் தன் கவித்துவத்தை மெருகூட்டிக்கொண்ட செல்வி சர்வேஸ்வரி கதிரித்தம்பியின் தேர்ந்த கவிதைகளின் தொகுப்பு இது. கவிஞரின் முதலாவது கவிதைத் தொகுப்பாக 1.12.2012 அன்று கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் வெளியீடு கண்டிருந்தது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 54169).